காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் ஊஞ்சல் உற்சவம் விழா

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் ஊஞ்சல் உற்சவம் விழா நடந்தது.

காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் ஊஞ்சல் உற்சவம் விழா

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் ஊஞ்சல் உற்சவம் விழா நடந்தது.

குமாரபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் மார்ச். 5ல் மகா குண்டம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை, மஞ்சள் நீராட்டு, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று இறுதி நிகழ்ச்சியாக ஊஞ்சல் விழா உற்சவம் நடந்தது. அம்மன் சர்வ அலங்காரத்துடனும், சிவன் திரிசூலம் வடிவிலும் மலர்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அர்ச்சகர்கள் ஊஞ்சலை ஆட்டி விட்டனர், இதில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று பக்தி பாடல்கள் பாடினார்கள். சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. கோவில் விழாக்குழு தலைவர் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் ஊஞ்சல் உற்சவம் விழா நடந்தது.

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்