காளியம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை

காளியம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை
X
குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் பண்டிகையையொட்டி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நடந்தது.

காளியம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் பண்டிகையையொட்டி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நடந்தது.

குமாரபாளையத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த, அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் நேற்றுமுன்தினம் மகா குண்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. காளியம்மன் கோவில் வளாகத்தில் துவங்கிய தேர், ராஜ வீதி சேலம் சாலை வழியாக வந்து தம்மண்ணன் வீதியில் மாலை 02:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை 04:00 மணிக்கு துவங்கிய தேரோட்டம் ஆக்ராஹாரம் வழியாக சென்று இரவு 07:00 மணியளவில் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் தேரோட்டம் இங்கிருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் இன்று தேர் நிலை சேர உள்ளது. இன்று இரவு வாண வேடிக்கை , நாளை ஊஞ்சல் விழா, மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

படவிளக்கம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

Next Story