கலிக்கம் சித்த வைத்திய முகாம்

கலிக்கம் சித்த வைத்திய முகாம்
X

குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கலிக்கம் சித்த வைத்திய முகாம் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

இது பற்றி சித்தா டாக்டர் கார்த்தி கூறியதாவது:

உடம்பில் உள்ள நோய்களை மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சை கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல் சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்புகள், தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல் லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் பங்கேற்கும் நபர்கள் சிகிச்சை முறையை பாராட்டி வருவதால், வாரா வாரம் கூட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்தது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில், அபெக்ஸ் சர்வேதேச சங்கம், எஸ்.எஸ்.எம். பொறியியல், கலை, மற்றும் அறிவியல், மேனேஜ்மெண்ட் கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி,

முன்னாள் சர்வதேச அபெக்ஸ் சங்க தலைவர், கல்லூரி தாளாளர் மதிவாணன் பங்கேற்று, பள்ளியின் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான எழுதும் மேஜைகள், டேபிள்கள், சேர்கள், இரு கணினிகள் உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.

கல்லூரி முதல்வர்கள் பாலமோகன், காமராஜ், அபெக்ஸ் சங்க நிர்வாகிகள் விடியல் பிரகாஷ், ஷர்மிளா, ஆசிரியைகள் ஹெலன், ஸ்டெல்லா, ரூத் பிரியங்கா, ஜமுனா, சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story