காளியம்மன் கோவில் திருவிழா கணக்கு சமர்பித்தல், நன்றி தெரிவித்தல் கூட்டம்

காளியம்மன் கோவில் திருவிழா கணக்கு சமர்பித்தல், நன்றி தெரிவித்தல் கூட்டம்
X

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா கணக்கு சமர்ப்பித்தல் மற்றும் நன்றி தெரிவித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா கணக்கு சமர்பித்தல் மற்றும் நன்றி தெரிவித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல், பூ மிதித்தல், தேர்த்திருவிழா, அம்மன் திருக்கல்யாணம், வண்டி மற்றும் வாண வேடிக்கை, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இதன் வரவு, செலவு கணக்கு சமர்பித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் விழாக்குழு தலைவர் ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது. திருவிழா வசூல், செலவு கணக்கு விபரம், மீதி கையிருப்பு ஆகியவை அனைவரின் முன்பும் சமர்பிக்கப்பட்டது.

விழாக்குழு தலைவர் ரகுநாதன் கூறுகையில், விழா சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய ஊர் பொதுமக்கள், குண்டம் பராமரிப்பு குழு, விழாக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் விழாக்குழு நிர்வாகிகள் நடராஜபெருமாள், ராஜ்குமார் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
future ai robot technology