அரசு பள்ளியில் கக்கன் பிறந்தநாள் விழா!

அரசு பள்ளியில்  கக்கன்  பிறந்தநாள் விழா!
X

குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக குமாரபாளையம் ஸ்டேட் வங்கி மேலாளர் லெனின் பங்கேற்று கக்கன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி மற்றும் மாணவ, மாணவியர்களும் கக்கன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடியல் பிரகாஷ் தலைமையில் கக்கனின் நேர்மை என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, மற்றும் கட்டுரை போட்டி, நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்களை மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கோபாலகிருஷ்ணன், ஸ்டேட் வங்கி துணை மேலாளர் அன்புராஜ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

ஸ்டேட் வங்கி மேலாளர் லெனின் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் காமராஜ் அமைச்சர் குழுவில் முன்னாள் அமைச்சர் கக்கன் நேர்மையான வழியில் தன் கடமையை செய்தார். சிறந்த தலைவராக, அறிஞராக வர நன்கு படிக்க வேண்டும். உங்கள் எல்லோரையும் வங்கிக்கு அழைத்து சென்று வங்கி செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு பெற செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!