குமாரபாளையம் பகுதி கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

குமாரபாளையம் பகுதி கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
X

குமாரபாளையம் சாந்தபுரி கற்பக விநாயகர் கோவிலில்,  கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் உள்ள கோவில்களில், கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் சுற்று வட்டாரப் பகுதியில், கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானி ஊராட்சி கோட்டைமலை சிவன் கோவில், குமாரபாளையம் காளியம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், சாந்தபுரி கற்பக விநாயகர் கோவில்களில் கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story