குமாரபாளையத்தில் காய்கறி மினி லாரி கவிழ்ந்து விபத்து: சிதறிய காய்கறிகள்

குமாரபாளையத்தில் காய்கறி மினி லாரி கவிழ்ந்து விபத்து: சிதறிய காய்கறிகள்
X
பைல் படம்
குமாரபாளையத்தில் காய்கறி ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காய்கறிகள் சாலையில் சிதறி கிடந்தன.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் காய்கறி ஏற்றிக் கொண்டு டெம்போ வாகனம் வந்து கொண்டிருந்தது.

கத்தேரி பிரிவு பகுதியில் வந்த போது நிலை தடுமாறி டெம்போ கவிழ்ந்ததில் காய்கறிகள் புறவழிச்சாலை முழுதும் சிதறின.

இதனால் வாகனங்கள் எதுவும் போக முடியாமல் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கும் சூழ்நிலை உருவானது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில் டெம்போ ஓட்டுனர் பெயர் அரவிந்தன், 25, என்பதும், காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு செல்வதும் தெரிய வந்தது.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மீட்பு வாகனம் மூலம் கவிழ்ந்த டெம்போவை தூக்கி நிறுத்தி,சிதறிய காய்கறிகளை பிளாஸ்டிக் பெட்டிகளில் பொதுமக்கள் சிலரும் சேகரித்தனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு