ஜேகேகேஎன் மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு!

ஜேகேகேஎன் மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு!
X
ஜேகேகேஎன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு! தலைப்பு சமத்துவம்

நிகழ்வின் தலைப்பு : சமத்துவம்

நிகழ்விடம் : நடராஜா வித்யாலயா அவைக்களம்

நிகழ்ச்சி நடக்கும் தேதி : 26ஆகஸ்ட் 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : 1.30பி.ப-4:00பி.ப

தலைமை : திருமதி.ந.செந்தாமரை, தாளாளர்அவர்கள்,ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்கள்

முன்னிலை : திரு.ஓம் சரவணா, நிர்வாக இயக்குநர் அவர்கள்,ஜே.கே.கே நடராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி


வரவேற்புரை:

மூ.சபரிநாத், எட்டாம் வகுப்பு ஆ-பிரிவு,

ஜே கே கே நடராஜா வித்யால்யா, குமாரபாளையம்

படிப்பு விவரம்:

சமத்துவம் :*

சமத்துவம் என்பது ஒருவரது பாலினம் ,இனம் ,தேசிய இனம் ,சமயம் ,தேசிய பூர்வீகம், திருமண நிலை ,வயது ,சமூக பின்புலம் போன்றவற்றின் காரணமாக எந்த ஒரு பாரபட்சமோ அல்லது துன்புறுத்தலோ இருக்கக்கூடாது என்பதாகும்.


பாட அவுட்லைன்:

அ.சமூக சமத்துவம்

ஆ.பாலின சமத்துவம்

இ.பொருளாதார சமத்துவம்

ஈ.குடியியல் சமத்துவம்.


அ.சமூக சமத்துவம்:

ஒவ்வொரு நபரும் அவர்களின் பிறப்பு, ஜாதி, பாலினம் ,மதம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் சம எண்ணிக்கையிலான வாய்ப்புகளை பெறுவதை உறுதி செய்கிறது. மேலும் எந்த ஒரு தனி நபருக்கும் எந்த வகையான பொறுப்பு அல்லது வாய்ப்பு அடிப்படையில் பாகுபாடு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆ. பாலின சமத்துவம்: மனித இனங்களில் ஆண், பெண் இருப்பாலரும் தமது தனிப்பட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் .தங்களது விருப்பங்களை எந்தவித கட்டுப்பாடும் இன்றி நிறைவேற்றிக் கொள்ளலாம். பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் கூறுகிறது.


இ. பொருளாதார சமத்துவம் :

பொருளாதார சமத்துவம் என்பது வருமான பகிர்வு ,செல்வ பகிர்வு, நுகர்வு பகிர்வு ஆகியவற்றை பற்றியதாகும்.

ஈ. குடிமை சமத்துவம்:

அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளைப் பெறுதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடி மக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை ,பணக்காரன் ,சாதி மற்றும் சமயக் கொள்கை ஆகியவை காரணமாக பாகுபாடு இருத்தல் கூடாது என்பதைப் பற்றிக் கூறுகிறது.


சுருக்கம்:

சமத்துவம் என்பது ‘ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவினரிடையே வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பொருளாதாரம்,பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் “அனைவரும் சமம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் செயற்படுதல்’ ஆகும்.

நன்றியுரை:

யு.ஓவிய லக்ஷ்மி,

எட்டாம் வகுப்பு ஆ- பிரிவு,

நடராஜா வித்யால்யா.

பங்கு பெறுவோர் விபரம் :

எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் . நடராஜா வித்யாலயா.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!