ஜேகேகேஎன் கல்லூரி மாணவர்கள் வெற்றி! நிர்வாக தலைவர், இயக்குநர் பாராட்டு!

ஜேகேகேஎன் கல்லூரி மாணவர்கள் வெற்றி! நிர்வாக தலைவர், இயக்குநர் பாராட்டு!
X
மாநில அளவிலான கபாடி போட்டியில் ஜேகேகேஎன் கல்லூரி மாணவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மாநில அளவிலான கபாடி போட்டியில் ஜேகேகேஎன் கல்லூரி மாணவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெங்கம்பூரில் வானவில் கபாடிக் குழு சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாநில அளவிலான கபாடி போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் ஜேகேகேஎன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


இந்த போட்டித் தொடரில் ஜே கே கே நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அவர்களுக்கு வெற்றிக்கோப்பையும், மூன்றாவது இடத்துக்கான ஊக்கத்தொகை ரூபாய் 15,000 வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற கோப்பையுடன் மாணவர்கள் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் நிர்வாக இயக்குநர் ஓம் சரவணா அவர்களிடமும் கோப்பையை வழங்கி பாராட்டுக்களை பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!