ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவன இயக்குனர் ஓம் சரவணா தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாம்.

கம்பத்துக்காரர் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி, ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் கம்பத்துக்காரர் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி, ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரி சார்பில் இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடராஜா கல்வி நிறுவன இயக்குனர் ஓம் சரவணா தலைமையில் நடைபெற்றது. கம்பத்துக்காரர் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர் இளஞ்செழியன், டாக்டர் கார்த்திகா பிரவீன் மற்றும் ஈரோடு டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சொத்தை பல், பல் கூச்சம் ஈறுகளில் ரத்தக்கசிவு, ஈறு சிதைவு நோய், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், ஆறாத வாய்ப்புண், உள்ளிட்ட பல வகை நோய்களுக்கும் கண் மற்றும் பொது சிகிச்சை வழங்கினர். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை இலவசமாக பார்க்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்