மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி மாணவர் சாதனை

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி  மாணவர் சாதனை
X

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் குமாரபாளையம் மாணவர் கோகுலக் கண்ணன் சாதனை படைத்துள்ளார்.

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் குமாரபாளையம் மாணவர் சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் கோகுல கண்ணன், 21. கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, 2 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள், பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரை நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினர். மாணவனின் தந்தை சக்தி வேல், நடிகர் விஜய் யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் நகர தலைவராகவும், தொகுதி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். மாணவன் கோகுல கண்ணனின் சாதனை குறித்து, விஜய்க்கு தகவல் தெரிவித்ததின் பேரில், நடிகர் விஜய், மாணவனை பாராட்டினார்.

Tags

Next Story