அட்சய திருதியையொட்டி ஆர்வத்துடன் நகை வாங்கிய பொதுமக்கள்

அட்சய திருதியையொட்டி ஆர்வத்துடன் நகை வாங்கிய பொதுமக்கள்
X

குமாரபாளையம் நகைக்கடை ஒன்றில் நகைகளை ஆர்வமுடன் பார்வையிடும் பெண்கள். 

அட்சய திருதியையொட்டி குமாரபாளையத்தில் ஆர்வத்துடன் பொதுமக்கள் நகைகளை வாங்கிச் சென்றனர்.

நேற்று அட்சய திருதியை நாள். அன்றைய தினம் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் இந்த நாளில் தங்கம் வாங்குவதை பொதுமக்கள் வழக்கமாகி, ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அட்சய திருதியை நாள் என்பதால், நேற்று குமாரபாளையம் நகை கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் அவரவர் வசதிக்கேற்ப நகைகள் வாங்கினர். அனைத்து நகைக்கடைகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!