வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!
X
குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதிவதனி, 29. இவரது கணவர் அம்சமணி, 37. பெருந்துறை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 09:30 மணியளவில் அம்சமணி வேலைக்கு போக, குழந்தைகள் பள்ளிக்கு போக, மாமனார் சுப்பிரமணி, 65, மாமியார் செல்லம்மாள், 62, இருவரும உறவினர் துக்க வீட்டிற்கு சென்றனர்.

மதிவதனி மாடுகள் மேய்க்க சென்றார். காலை 11:00 மணியளவில் மாமியார் செல்லமால் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் போது, கிரில் கதவு, வீட்டின் கதவு திறந்த நிலையிலும் இருந்தது கண்டு அதிர்சியடைந்தார். இது குறித்து மதிவதனிக்கு தகவல் தர வீட்டின் உள்ளே சென்ற இருவரும் , பீரோ திறந்து கிடப்பதையும், துணி,மணிகள் சிதறி கிடப்பதையும் கண்டனர்.

உறங்கும் கட்டிலின் அடிப்பகுதியில் வைத்த 7 ¾ பவுன் தங்க தாலிக்கொடி, சாமி படத்தின் பின்புறம் வைத்திருந்த 8 ஆயிரம் ரொக்கம், கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகிய திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மதிவதனி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story