குமாரபாளையத்தில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை

குமாரபாளையத்தில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன்  போலீசார் ஆலோசனை
X

குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, நகை அடகு கடை, வங்கி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆய்வாளர் ரவி பேசும்போதுஒவ்வொரு வங்கி, நகைக் கடைகளில், நகை அடகு கடைகளில் சி.சி.டி.வி. கேமரா வைக்க வேண்டும். வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். அலாரம் பொருத்த வேண்டும். சந்தேகப்படும் படி நபர்கள் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என்றார்.

இதில் வங்கி மேலாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மலர்விழி, சிவகுமார், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் 16 வங்கிகள், 21 ஏ.டி.எம்.கள், 8 நகைக்கடைகள் மற்றும் பல நகை அடகு கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி