குமாரபாளையத்தில் நகை, பணம் திருட்டு: சிறுவன் கைது

குமாரபாளையத்தில் நகை, பணம் திருட்டு:  சிறுவன் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் தங்கராஜ், 53. தனியார் மில் தொழிலாளி. இவரது மனைவி ராமயம்மாள் அதே பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார்.

நேற்றுமுன்தினம் மாலை 05:30 மணியளவில் மனைவியின் உறவினர் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால், தங்கராஜ், மனைவி, மகள் ஆகியோர் ஈரோட்டிற்கு பார்க்க சென்று விட்டு, இரவு 09:30 மணியளவில் வும் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதே பகுதியில் கரும்பு வெட்டும் சிறுவன் மாற்றி, மாற்றி பேசியதால், போலீசார் விசாரணையில் திருடியது அவன்தான் என்பது தெரியவந்தது. அவனிடமிருந்து நான்கரை பவுன் தங்க நகை, 48 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்யா, 17, என்ற சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்