ஜெலட்டின் கடத்தல் வழக்கில் 7 பேர் கைதான நிலையில் மீண்டும் 3 பேர் கைது

ஜெலட்டின் கடத்தல் வழக்கில் 7 பேர் கைதான  நிலையில் மீண்டும் 3 பேர் கைது
X
குமாரபாளையம் ஜெலட்டின் கடத்தல் வழக்கில் 7 பேர் கைதான நிலையில் நேற்று மீண்டும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெலட்டின் கடத்தல் வழக்கில் 7 பேர் கைதான நிலையில் மீண்டும் 3 பேர் கைது

குமாரபாளையம் ஜெலட்டின் கடத்தல் வழக்கில் 7 பேர் கைதான நிலையில் நேற்று மீண்டும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் பிப். 28ல் மாலை 05:00 மணியளவில், அருவங்காடு பிரிவு பகுதியில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி ஈச்சர் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்திய போது, அதன் ஓட்டுனர், கீழே இறங்கி வாகனத்தின் ஆவணங்களை கொடுப்பது போல் வந்து, திடீரென்று தப்பி ஓடி விட்டார். வாகனத்தில் போலீசார் சோதனை செய்த போது, ஜெலட்டின் குச்சிகள், அம்மோனியா நைட்ரேட் ஆகிய வெடி பொருட்கள் சுமார் நான்கு டன்னிற்கு அதிகம் இருந்தது. இது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், வெடி பொருட்களை மாவட்ட எஸ்.பி. உத்திரவின்பேரில், வேலூர் அருகே உள்ள இருக்கூரில், அரசு கிடங்கில் பாதுகாப்பாக வைத்து விட்டு, தப்பியோடிய நபர் குறித்து, தனிப்படை போலீசார் மூலம் விசாரணை செய்தனர். இதில் கரூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிருபாசங்கர், 45, பார்த்திபன், 39, ராஜேந்திரன், 54, அப்துல் நஜீத், 40, சுருளிராஜன், 44, ராமலிங்கம், 51, பழனிச்சாமி, 57 ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று இதே வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி, சேலம் பகுதியை சேர்ந்த ராஜா அண்ணாமலை, 47, லிங்கேஸ்வரன், 25, வருண், 33, ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெலட்டின் கடத்தல் வழக்கில் கைது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Next Story
ai solutions for small business