குமாரபாளையத்தில் ஜீவானந்தம் நினைவு நாள் அனுஷ்டிப்பு

பைல் படம்.
குமாரபாளையத்தில் ஜீவானந்தம் சுமை தூக்குவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜீவானந்தம் நினைவு நாள் அனுஷ்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நஞ்சப்பன் தலைமை வகித்தார். சேலம் சாலை ஆர்.ஏ.எஸ். தியேட்டர் எதிரில், காவேரி நகர், சேலம், கோவை புறவழிச்சாலை ஆகிய இடங்களில் ஜீவாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
சங்க செயலர் பாலசுப்ரமணி பேசுகையில், தோழர் ஜீவா என்றழைக்கப்படும் ஜீவானந்தம் அவர்கள் இந்திய விடுதலை உணர்வு நிறைந்த பேச்சால் ஆங்கிலேயரை அதிர வைத்தவர். காந்தியின் கொள்கை பெரியாரின் களப்பணி போன்றவற்றை பின்பற்றி ராஜாஜி காமராஜர் வரிசையில் மார்க்சிசவாதி ஜீவானந்தம் சிறப்பு பெறுகின்றார்.
எல்லோரும் சமம் எல்லோரும் நிகர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். எதற்கும் அஞ்சாத மாமனிதர்.அண்ணாவைப் போலவே அந்தக் காலத்து இளைஞர்களைக் கவர்ந்தவர் ஜீவானந்தம் ஆவார்.
இவருடைய பேச்சால் இளைஞர்களை வசீகரித்து புதியதோர் தலை முறையை உருவாக்கினார். பொதுவுடமை சமுதாயமான அவருடைய கனவை நனவாக்க வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அஞ்சாத சிங்கம் ஜீவானந்தம் என்றால் அது மிகையல்ல.
இவர் பெரும் இலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பல பாடல்களையும் பாடியுள்ளார் என அவர் பேசினார்.
நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜேந்திரன், பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu