குமாரபாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். 33 வார்டுகளிலும் கட்சியின் கொடியேற்றிவைக்கப்பட்டது.

அனைத்து வார்டுகள், அனைத்து வீதிகள் எனும் வகையில் அதிக இடங்களில் ஜெயலலிதாவின் திருவுருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, குமணன், பழனிச்சாமி, தனசேகரன், ராஜு, சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்ற 10 பேர் அவரவர் வார்டுகளில் ஜெயலலிதா பிறந்த நாளினை பொதுமக்களுடன் கொண்டாடினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!