தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் துவக்கம்

தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி
முகாம் துவக்கம்
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமா பந்தி முகாம் துவங்கியது.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமா பந்தி முகாம் துவங்கியது. இந்த முகாம் மே. 15, 16 மற்றும் 20 ஆகிய நாட்கள் நடைபெறவுள்ளது. ஜமாபந்தி அலுவலர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலில், ஜமாபந்தி வட்டாச்சியர் கதிர்வேல் பங்கேற்று, ஜமாபந்தியை துவக்கி வைத்தார். குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை துவக்கி வைத்தார். பட்டா மாறுதல், புதிய ரேசன் கார்டு, இலவச வீட்டுமனை, முதியோர் உதவித் தொகை, உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். நேற்று ஆனங்கூர், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், காடச்சநல்லூர், புதுப்பாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம், பாப்பம்பாளையம், ஆகிய கிராம பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். இன்று மே. 16, கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், எலந்தகுட்டை, பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், கொக்காராயண் பேட்டை, படவீடு ஆகிய கிராம பொதுமக்களும், மே. 20ல், சவுதாபுரம், பல்லக்காபாளையம், அய்யம்பாளையம் அக்ரஹாரம், கொமாரபாளையம், சமயசங்கிலி அக்ரஹாரம் ஆகிய கிராம பொதுமக்களும் மனுக்கள் கொடுக்க உள்ளனர்.
இதில் துணை தாசில்தார் செல்வராஜ், ஆர்.ஐ.க்கள் புவனேஸ்வரி, ஜெகதீசன், வி.ஏ.ஓக்கள் முருகன், செந்தில்குமார், தியாகராஜன், தேவராஜ், கோவிந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமா பந்தி முகாம் துவங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu