குமாரபாளையம் ஜல்லிக்கட்டு ஜன. 25ஆம் தேதிக்கு மாற்றம்

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு ஜன. 25ஆம் தேதிக்கு மாற்றம்
X

கோப்பு படம் 

குமாரபாளையத்தில் ஜன. 22ஆம் தேதிக்கு பதில் ஜன. 25ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக, குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், கடந்த 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 6வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் ஜன. 22ல் நடைபெறவிருப்பதாக அறிவித்திருந்தோம். நிர்வாகப்பணிகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி ஜன. 25க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். காளைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று, அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வோர் தொடர்புக்கு போட்டி பேரவை தலைவர் வினோத்குமாரை தொடர்பு கொள்ளலாம். அவரது செல்போன் : 98941 40076

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!