பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள்  பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயனாரப்பன். 

தேவூர் அருகே பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

தேவூர் அருகே பாங்கிகாடு பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்ற ஐயனாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா, மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கமாகும். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் திருவிழா நடைபெறாமல் போனது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஐயனாரப்பன் கோவிலில் பங்காளிகள் ஒன்று கூடி, மண் பானையில் பொங்கல் வைப்பதற்கு முடிவு செய்தனர். இதற்கென, அரசிராமணி செட்டிபட்டி பகுதியில், மண்பாண்டத் தொழிலாளர்கள் மண் பூஜை செய்து கொடுத்தனர்,

தேவூர் அருகே அரசிராமணி பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழாவில் திரளான ஆண்கள் கலந்து கொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

இதை தொடர்ந்து, பக்தர்கள் விரதம் இருந்து தினந்தோறும் சிறப்பு வழிபாட்டு செய்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக சென்றாயனூர் பகுதியில், ஐயனாரப்பன் கோவில் வீடு பதியில் இருந்து, அரிசி எடுத்து செல்லுதல், ஆண்கள் மண் பானையில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, ஐயனாரப்பன் சிறப்பு அலங்காரம், பன்றி அழைத்து வருதல், கிடா வெட்டுதல், ஐயனாரப்பன் கத்தி மேல் நடந்து சென்று பன்றி பலியிடுதல் மற்றும் பெரிய பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

விழாவில் பாங்கிகாடு, சென்றாயனூர், அக்கரைக் காடு, ஓடசக்கரை, புளியம்பட்டி,சித்தார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself