குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் பிரச்சினை: பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குமாரபாளையத்தில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 500 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வசந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். காலை 08:30 மணியளவில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின், ஆர்.டி.ஒ. சுகந்தி உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு விழாக்குழுவினர் டோக்கன்கள் கொடுத்த நிலையில், பல மாடுகளின் உரிமையாளர்கள், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை அகற்றி விட்டு, டோக்கன்கள் இல்லாமல் களத்தில் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியானது. டோக்கன்கள் விநியோகம் சரியான முறையில் வழங்கப்படவில்லை. அதனால் தான் இந்த குழப்பம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
டி.எஸ்.பி. இமயவரம்பன், ஆர்.டி.ஒ. சுகந்தி வசம், விழாக்குழுவினர், மீண்டும் போட்டிகள் நடத்த அனுமதி தர வேண்டி கேட்டுக்கொண்டனர். உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின், மீண்டும் போட்டிகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. வாடிவாசலிலிருந்து வெளியேறிய காளைகள் இரண்டு, மீண்டும் வாடிவாசலை தேடி ஓடி வந்தது. இதனை கண்ட மாடு பிடி வீரர்கள், இரும்பு தடுப்புகள் மீது ஏறி நின்று, தங்களது உயிரை காத்துக்கொண்டனர். திரும்பி வந்த காளைகள் மீண்டும் வாடிவாசலில் உள்ளே நுழைய முற்பட்டதால், வாடிவாசல் கதவு அடைக்கப்பட்டது. அப்போது அங்கு அடுத்து வாடிவாசலில் திறந்து விடவிருந்த மாட்டின் உரிமையாளர் சேலத்தை சேர்ந்த தமிழரசன், கதவின் அருகே கால் வைத்திருந்ததால், அவரது காலின் விரல்கள் பகுதி துண்டிக்கப்பட்டது. இவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த போட்டிகளில் மாடுகள் முட்டியதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu