வேமன்காட்டுவலசு அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்

வேமன்காட்டுவலசு அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்
X

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஹால் டிக்கெட் வழங்கும் விழாவில் தலைமை ஆசிரியை கவுரி தலைமை வகிக்க, பி.டி.ஏ தலைவர் காந்திநாச்சிமுத்து மாணவ, மாணவியர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கினார்.

வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் விழா தலைமை ஆசிரியை கவுரி தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஏ தலைவர் காந்திநாச்சிமுத்து 62 மாணவ, மாணவியர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது மாணவ பருவத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் அறிவுரை கேட்டு பின்பற்ற வேண்டும். படிப்பையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாக கருத வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் குமார், ஆசிரியை ராதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!