குமாரபாளையம் நகராட்சி சேர்மனுக்கு முதல்வர் பங்கேற்கும் விழா அழைப்பிதழ்

குமாரபாளையம் நகராட்சி சேர்மனுக்கு முதல்வர் பங்கேற்கும் விழா அழைப்பிதழ்
X

நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனுக்கு, முதல்வர் பங்கேற்கவிருக்கும் விழா அழைப்பிதழ் வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மனுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழக முதல்வர் பங்கேற்கவிருக்கும் விழா அழைப்பிதழ் வழங்கினார்.

நகர்ப்புற, உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல்லில் ஜூலை 3ல் நடைபெறவுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநகர மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி சேர்மன்கள், துணை சேர்மன்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டி, நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனுக்கு அழைப்பிதழ் வழங்கினார். அப்போது நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், ஜேம்ஸ், வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர். குமாரபாளையம் சேர்மன் விஜய் கண்ணன் சுயேட்சையாக போட்டியிட்டு சேர்மன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். சில நாட்கள் முன்பு சென்னைக்கு சென்று முதல்வர், மூத்த நிர்வாகிகள் நேரு உள்ளிட்ட பலரை சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!