குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் யோகா தின விழா

குமாரபாளையம்  ரோட்டரி சங்கம் சார்பில்  யோகா தின விழா
X

குமாரபாளையம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் தேசிய யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி வழங்கப்பட்டது

குமாரபாளையம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் தனியார் ஹோமியோ மருத்துவக் கல்லூரி சார்பில் தேசிய யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் தனியார் ஹோமியோ மருத்துவக் கல்லூரி சார்பில் தேசிய யோகா தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மூச்சுப் பயிற்சி, உடல் வலி போக்கும் பயிற்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பெண்களுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் உடல் வலி போக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இதில் மருத்துவ கல்லூரியின் முதல்வர் சரவணன் மற்றும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரோட்டரி சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ரோட்டரி சங்கத்தின் கவர்னர் நியமனம் சிவசுந்தரம் யோகா வகுப்புகளை தொடங்கி வைத்தார்

இந்த யோகா மற்றும் சிறப்பு மருத்துவ முகாமில் சுரபி பவுண்டேசனின் வாகை சூடி மகளிர் குழுவினர் பங்கேற்றனர். இவர்களுக்கு தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவ மாணவிகள் யோகா பயிற்சி வழங்கினர். ரோட்டரி சங்கத் தலைவர் சந்திரன் செயலாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!