பன்னாட்டு தமிழ் ஆய்வு கருத்தரங்கம்: வள்ளலார் பேரன், பாரதியின் கொள்ளு பேத்தி பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடந்த பன்னாட்டு தமிழ் ஆய்வு கருத்தரங்கில் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
குமாரபாளையத்தில் பாரதியின் 100வது ஆண்டு நினைவு, வ.உ.சி.யின் 150வது நினைவு, வள்ளலாரின் 200வது ஆண்டு நினைவு சார்பாக , தமிழ் சுடர்களை போற்றுவோம் எனும் தலைப்பில், பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம் மற்றும் ஆய்வுக் கோவைகள் வெளியீடு நிகழ்ச்சி கல்லூரி தனியார் கல்லூரி தாளாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரராமன், மஞ்சுளா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வள்ளலார் பேரன் உமாபதி, பாரதியாரின் கொள்ளு பேத்தி உமா பாரதி பங்கேற்று வள்ளலார் பற்றியும், பாரதியை பற்றியும் பேசினார்கள்.
சென்னை முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன், வடலூர், தலைமை சமரச சுத்த சன்மார்க்க சங்க செயல் தலைவர் ராம்தாஸ், மாநில பொது செயலர் டாக்டர் வெற்றிவேல், வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை தலைவர் கால்டுவெல் வேல்நம்பி, ஈரோடு அருள்சித்தா கேர் அருள்நாகலிங்கம், திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சாது ஜானகிராமன், ஈரோடு சாந்தம் உலக தமிழ் வளர்ச்சி ஆய்வு மையம், தலைவர் கரி வரதராஜன், சென்னை, குறள்மலைச் சங்கம், நிறுவனர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் பேசினார்கள்.
இவ்விழாவையொட்டி நடைபெற்ற ஓவியப்போட்டியில் சஞ்சய்குமார் முதல் பரிசும், நிர்மல் குமார் இரண்டாம் பரிசும், தமிழ்செல்வி மூன்றாம் பரிசும், ராஜலட்சுமி ஆறுதல் பரிசும் பெற்றனர்.
கட்டுரை போட்டியில் சுவாதி முதல் பரிசும், அபிராமி இரண்டாம் பரிசும், ஆனந்தி மூன்றாம் பரிசும், சிந்து ஆறுதல் பரிசும் பெற்றனர். தமிழ்த்துறையில் சிறந்து பணியாற்றிவர்கள், சமூக பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் விடியல் பிரகாஷ், இயல்பா மேரி, நளினா, முஹம்மது பஹீம், ஹீத் அகமத், ரித்திகா, தேவிகா சேட்டு மாதர்ஷா உள்ளிட்ட 12 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கட்டுரை போட்டியில் மொத்தம் சமர்பிக்கப்பட்ட கட்டுரைகள் எண்ணிக்கை 450. 3 நூல் தொகுப்புகளும் சேர்ந்து 1800 பக்கங்கள் கொண்டவையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu