ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தின விழா

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தின விழா
X
ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தின விழா நடைபெற இருக்கிறது.

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்

இளையோர் சங்கம் – முன் அறிக்கை

(சர்வதேச எழுத்தறிவு தின விழா)

நிகழ்வின் தலைப்பு: “எழுத்தறிவு என்பது கல்வியின் முடிவு அல்ல”

நிகழ்விடம்: செந்தூராஜா அரங்கம், ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183.

நிகழ்ச்சி நடக்கும் தேதி: செப்டம்பர் 8, 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 10.30 மணி, வெள்ளிக்கிழமை

முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் புலமுதன்மையர் மற்றும் பொறுப்பு முதல்வர் ஆகியோர் முன்னிலையில்

சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். செ. சுமதி, உதவிப்பேராசிரியர்,ஆங்கிலத்துறை,

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183.

வரவேற்புரை: செல்வி. மோனிகா, இளங்கலை இரண்டாமாண்டு, கணினி அறிவியல் துறை மாணவி, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 வரவேற்புரை வழங்குவார்.

நிகழ்வின் சிறப்புரை: திருமதி. முனைவர். செ. சுமதி, உதவிப்பேராசிரியை, ஆங்கிலத்துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 “எழுத்தறிவு என்பது கல்வியின் முடிவு அல்ல” பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றுவார்.

பங்கு பெறுவோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால்

உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.

நிகழ்வின் முக்கியத்துவம்:

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8- ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச எழுத்தறிவு தினம் எழுத்தறிவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் உலகம் முழுவதும் இருக்கும் சவால்களை முன்னிலைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவியாக எழுத்தறிவை ஊக்குவிப்பதில் வாசிப்பு மற்றும் கல்வி அறிவின்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை நோக்கங்களில் அடங்கும். சர்வதேச எழுத்தறிவு தினத்தின் முக்கியத்துவம், தரமான கல்வி மற்றும் எழுத்தறிவு திறன்களுக்கான உலகளாவிய அணுகலை பரிந்துரைப்பதில் அதன் பங்கு உள்ளது. கல்வி அறிவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. கல்வியறிவு சமூக உள்ளடக்கத்தை வளர்க்கிறது, பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுக்கும் தடைகளை உடைக்கிறது. கலாச்சார பாரம்பரியம், மரபுகள் மற்றும் மொழிகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து அனுப்புவதற்கு கல்வியறிவு அவசியம்.

வளர்ச்சி இலக்கு:

சர்வதேச எழுத்தறிவு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயித்த பல நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. சர்வதேச எழுத்தறிவு தினம் சில வளர்ச்சி இலக்குகளான தரமான கல்வி, பாலின சமத்துவம், குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்ருடன் தொடர்புடையது.

நன்றியுரை:

நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி மு.ஜெய ஸ்ரீ இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி நன்றியுரை வழங்குவார்.

Tags

Next Story
ai in future agriculture