குமாரபாளையத்தில் சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினவிழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் சர்வதேச மாற்றுத்தினாளிகள்   தினவிழா கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினவிழாவில்  சமூக விழிப்புணர்வு பேரணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், டாக்டர் ரேணுகா கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

குமாரபாளையத்தில் சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, குமாரபாளையம் ரோட்டரி சங்கம், நாமக்கல், சேலம் மாவட்ட மாற்றுத்திறனுடையோர்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். முன்னதாக நகராட்சி அலுவலத்திலிருந்து ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி வரை சமூக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், டாக்டர் ரேணுகா கொடியசைத்து துவக்கி வைத்தனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன், தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!