குமாரபாளையத்தில் காவல்துறை பட்டாசுக் கடை அமைக்கும் பணி தீவிரம்

குமாரபாளையத்தில் காவல்துறை பட்டாசுக் கடை அமைக்கும் பணி  தீவிரம்
X

குமாரபாளையத்தில் காவல்துறை சார்பில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு பட்டாசு கடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் காவல்துறை சார்பில் குறைந்த விலை பட்டாசுக் கடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் காவல்துறை சார்பில் ஆண்டுதோறும் பட்டாசு கடை வைப்பது வழக்கம். இந்த ஆண்டும் பட்டாசு கடை வைக்க ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குமாரபாளையம் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் மிகுந்த பகுதி. இந்த தொழிலை நம்பி அதிக தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அதிக விலை கொடுத்து பட்டாசு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அனைவரும் உற்சாகமாக தீபாவளி பண்டிகை கொண்டாடவேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்து, தொழிலாளர்களின் குழந்தைகள் மகிழ்ந்திட அரசு உத்திரவின் பேரில் போலீசார் சார்பில் பட்டாசு கடை அமைக்கப்பட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது. இங்கு வந்து பட்டாசு வாங்கி அனைவரும் தீபாவளி கொண்டாட கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story