புறவழிச்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்: போக்குவரத்து மாற்றம்

புறவழிச்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்: போக்குவரத்து மாற்றம்
X

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சேலம் பக்கமிருந்து வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

ஒரே சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து போலீசாரும் இல்லாததால், வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. சரியில்லாத சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால், உரிய நேரத்திற்கு செல்ல வேண்டிய பஸ்கள், உயிர் காக்க செல்லும் ஆம்புலன்ஸ் ஆகியவை செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

Tags

Next Story
crop opportunities ai agriculture