குமாரபாளையம் நகராட்சியில் பதவியேற்பு விழா பணிகள் தீவிரம்

குமாரபாளையம்  நகராட்சியில் பதவியேற்பு  விழா பணிகள் தீவிரம்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதால் கூட்ட அரங்கு தயார் நிலையில் உள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில் பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 எனும் விதத்தில் 33 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இவர்களின் பதவியேற்பு விழா மார்ச் 2ல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து மார்ச் 4ல் காலை நகரமன்ற தலைவர் தேர்தலும், மாலை நகர்மன்ற துணை தலைவர் தேர்தலும் நடைபெறவுள்ளது. நகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கு, நகரமன்ற தலைவர் அறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!