குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரம்
X

குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் 1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் 1.5 கோடியில் விபத்து மற்றும் அவரச சிகிச்சை தனி பகுதி கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வகை படுத்துதல் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை முதல் தளத்தில் அமைக்கப்படவுள்ளது.

மருத்துவமனையின் நுழைவுப்பகுதியில் சில தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனை நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அகற்றியதால் அப்பகுதி தூய்மையாக உள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
ai tools for education