தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
X

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான நகரமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சை என 188 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 எனும் வகையில் 33 பேர் வெற்றி பெற்றனர். தேர்தல் ஆணையம் உத்திரவின்படி தேர்தல் நடந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் செலவு கணக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகயைில், குமாரபாளையம் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் உத்திரவின்படி தேர்தல் நடந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வெற்றி பெற்ற, வெற்றி பெறாத வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் செலவு கணக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவு கணக்கை குறிப்பிட்ட நாளுக்குள் சமர்பிக்க தகவல் தெரிவிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!