இன்ஸ்டா நியூஸ் எதிரொலி: விபத்துக்கு காரணமாகும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இன்ஸ்டா நியூஸ் எதிரொலி: விபத்துக்கு காரணமாகும்   ஆக்கிரமிப்புகள்  அகற்றம்
X

குமாரபாளையத்தில் இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலியாக விபத்துக்கு காரணமாகும் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

குமாரபாளையத்தில் இன்ஸ்டா நியூஸ் எதிரொலியாக விபத்துக்கு காரணமாகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் அரசு பஸ் மோதி பொறியாளர் சம்பவ இடத்தில் பலியானார். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது என இன்ஸ்டா நியூஸில் செய்தி வெளியானது.

இதையொட்டி நடைபாதை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் வாகனங்கள், போர்டுகள் ஆகியவை நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறபடுத்தி எச்சரித்து வந்தனர். இனி நடைபாதை ஆக்கிரமிப்பு செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யபடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி