இன்ஸ்டா செய்தி எதிரொலி: கோம்பு பள்ளம் தூர்வாரும் பணியை துரிதப்படுத்திய சேர்மன்

இன்ஸ்டா செய்தி எதிரொலி: கோம்பு பள்ளம் தூர்வாரும் பணியை துரிதப்படுத்திய  சேர்மன்
X

குமாரபாளையம் பெரந்தார் காடு கோம்பு பள்ளம் பகுதியில் தூர்வாரும் பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துரிதப்படுத்தியதால், தற்போது கழிவுநீர் செல்ல இடையூறாக இருந்த மரங்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

குமாரபாளையம் கோம்பு பள்ளம் தூர்வாரும் பணிகளை சேர்மன் விஜய்கண்ணன் துரிதப்படுத்தினார். .

குமாரபாளையம் கோம்பு பள்ளம் ஓடையில் பல வருடங்களாக தூர் வாரப்படாமல் முட்புதர்களாக காணப்பட்டது. பருவமழை முன்னெச்செரிக்கையாக நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துரித நடவடிக்கையால் கம்பன் நகர் முதல் பெராந்தார் காடு வரை உள்ள பகுதி, தி.மு.க. அலுவலகம் கோம்பு பள்ளம் பகுதி ஆகியவை தூர்வாரப்பட்டன.

பெரந்தார் காடு பகுதியில் உள்ள கோம்பு பள்ளம் வடிகாலில் மரங்கள், செடி, கொடிகள் அடர்ந்து காணப்பட்டன. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கும் நிலை ஏற்பட்டு, துர்நாற்றம் வீசியது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி இப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினார்கள். இது சம்பந்தமாக இன்ஸ்டா நியூஸ் இல் செய்தி வெளியானது.

சேர்மனின் உத்திரவின் பேரில் பெரந்தார் காடு பகுதி தூர் வாறும் பணிகள் துரிதப்படுதப்ப்பட்டன. கழிவுநீர் செல்ல இடையூறு ஏற்படுத்திய மரங்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

தற்போது பெரியார் நகர், அபெக்ஸ் காலனி அருகே உள்ள கோம்பு பள்ளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் (பொ) கணேசன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தனர். கவுன்சிலர் அழகேசன், கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன், சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் பல வார்டுகளின் கழிவு நீர் செல்கிறது. கத்தேரியில் துவங்கி, நகர எல்லை பகுதியான ராஜம் தியேட்டர் பின்புற பகுதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திபுரம், பெராந்தர் காடு, வழியாக வந்து பஸ் ஸ்டாண்ட், தம்மண்ணன் சாலை வழியாக சென்று மணிமேகலை வீதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மீன் கடைகள், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் அதிகம் உள்ளன. இதன் கழிவுகள் கோம்பு பள்ளத்தில் கொட்டப்படுவதாக அப்பகுதி கவுன்சிலர் நந்தினிதேவி சேர்மன் விஜய்கண்ணணிடம் புகார் செய்தார். இதையடுத்து கோம்பு பள்ளத்தை தூய்மை செய்ய தூய்மை பணியாளர்களுக்கு உத்திரவிட்டார். கோம்பு பள்ளத்தில் தூய்மை பணி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இறைச்சி கழிவுகள் கொட்டுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேர்மன் கூறினார்.

குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சேர்மன் விஜய்கண்ணன் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கோம்பு பள்ளம் பகுதியில் உள்ள குடியிருப்பு, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனத்தார் குப்பைகளை கோம்பு பள்ளத்தில் கொட்டி வருவதால் அடிக்கடி கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி பொக்லின் மூலம் அகற்றப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோம்பு பள்ளம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் இங்கு குப்பை கொட்டுவோருக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில் 10 ஆண்டுகளாக கோம்பு பள்ளம் எனும் கழிவுநீர் பள்ளம் தூர் வாரப்படாமல் இருந்தது என கூறப்படுகிறது. நகராட்சி சேர்மன் உத்திரவின் பேரில் இந்த பள்ளம் தூர் வாரப்படும் பணி துவங்கப்பட்டது. இந்த பணி கம்பன் நகர் முதல் இடைப்பாடி சாலை பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை நடைபெறவுள்ளது. இதே போல் பாலக்கரை மற்றும் கம்பன் நகர் பகுதியில் 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடம் கட்டுமான பணியை சேர்மன் பார்வையிட்டார். இதில் பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர் சத்தியசீலன், உதவி பொறியாளர் கண்ணன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ராஜ், தர்மராஜன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன், ஜுல்பிகர் அலி, கதிரேசன், முருகன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலையில் அப்பன் மேடு பகுதியில் கோம்பு பள்ளத்தில் தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலங்களில் சிறிய மழை என்றாலும் கோம்பு பள்ளம் கழிவுநீர் தரைமட்ட மட்ட பாலத்தின் மேலே பாய்ந்து ஓடும் நிலை ஏற்படும். இதனால் பாதை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நீண்ட வருடமாக பல அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். புதியதாக பொறுப்பேற்ற சேர்மன் விஜய்கண்ணன் இதனை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக மூலதன மானிய நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பள்ளிகள், கல்லூரி செல்லவும், ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்கள் கொண்டுவரவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் செல்லவும் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பலரது சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த பாலம் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!