குமாரபாளையத்தில் இன்ஸ்பெக்டர், போலீசார் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் எஸ்.ஐ.-க்கள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் எஸ்.ஐ.-க்கள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுபற்றி, இன்ஸ்பெக்டர் ரவி கூறியதாவது: மாவட்ட எஸ்.பி. உத்திரவின் பேரில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், வாகன தணிக்கை, வாகன திருட்டு, வாகன விபத்து, பொதுமக்களிடம் போலீசார் எவ்வாறு நடந்து கொள்வது?வழக்குகளில் குற்றவாளிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? கஞ்சா, அதிக விலைக்கு விதிமுறை மீறி விற்கப்படும் மது விற்பனையை தடுப்பது, என்பது உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது என்றார். எஸ்.ஐ.-க்கள் நந்தகுமார், மலர்விழி, முருகேசன், சிவகுமார், தன்ராஜ், மோகன், இளமுருகன், உள்பட போலீசார் பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu