பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: 11 கடைகள் மீது நடவடிக்கை

பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு:  11 கடைகள் மீது நடவடிக்கை
X

பள்ளிபாளையம் அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு செய்து 11 கடைகளை அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பள்ளிபாளையம் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்து 11 கடைகளை அடைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

பள்ளிபாளையம் அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு செய்து 11 கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், வெப்படை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 28 கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி அருகே இருந்த கடைகளில் ஆய்வு செய்த போது, அதில், புகையிலை பொருளான குட்கா விற்பது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, 11 கடைகள் சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து உணவுப்பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் கூறியதாவது:-

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை அடைப்பு மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேக்கரிகளில் கலப்பட டீத்தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஓட்டல் கடைகளில் பழைய உணவுபொருட்கள், மளிகை கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமைக்கப்பட்ட உணவுகளில் செயற்கை வண்ணம் சேர்க்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையத்தில் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். இது தவிர மேலும் 43 பேர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறி வருவதுடன், மாவட்டம் முழுதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய உத்திரவிட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் க்ரில் சிக்கன் 9 கிலோ, குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட பிரியாணி 4 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 25 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அபராதமாக 7 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர சாலைகளில், தள்ளுவண்டிகளில் சில்லி சிக்கன், சில்லி மீன், முழு மீன் ரோஸ்ட் என பல வகைகளில் வியாபாரம் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இது போன்ற கடைகள் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ளன. இவைகள் பழைய மீன்களா? என உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பல ஓட்டல் கடைகளில் முதல் நாள் போட்ட புரோட்டாக்கள் மறுநாள் சூடு செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இது போன்ற கடைகளில் பழைய எண்ணெய் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இதனால் வயிறு சம்பந்தமான பல நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகிறார்கள். கூலி வேலைக்கு சென்று, சிறுக சிறுக உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை இது போன்ற தரமற்ற சில கடைகளில் உணவுப்பொருட்களை உண்டு பலரும் பாதிக்கப்படும் நிலை, இனியும் தொடராதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story