குமாரபாளையம் பஸ், ஆட்டோக்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏன் தெரியுமா?

குமாரபாளையம் பஸ், ஆட்டோக்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: ஏன் தெரியுமா?
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பஸ்களில், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா விதிமீறல் உள்ளதா என, குமாரபாளையத்தில் பஸ்கள், ஆட்டோக்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரவல் அதிகமாகி வருவதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, குமாரபாளையத்தில் பஸ்கள், ஆட்டோக்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்.

இது பற்றி மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா கூறியதாவது: கொரோனா பாதிப்பு பரவி வருவதால், பஸ், ஆட்டோக்களில் என்ன இருக்கைகள் எண்ணிக்கை உள்ளதோ, அந்த அளவிற்கு மட்டும்தான் பயணிகள் ஏற்ற வேண்டும். ஸ்டாண்டிங்கில் செல்லும் வகையில் பயணிகளை ஏற்றக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, கத்தேரி பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக பயணிகளை ஏற்றினால் அபராதம், உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்டோ, பஸ் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை