நூதன முறையில் லாட்டரி விற்பனை: 2 மொபைல் போன்கள் பறிமுதல்; ஒருவர் கைது

நூதன முறையில் லாட்டரி விற்பனை:  2 மொபைல் போன்கள் பறிமுதல்;  ஒருவர் கைது
X
பைல் படம்.
குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 செல்போனை பறிமுதல் செய்தனர்.

மொபைல் போன்களில் எண்களை காட்டி நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் நேற்று மாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் நேரில் சென்றபோது, அங்கு ஒருவர் மொபைல் போன் காட்டியும், வெள்ளை பேப்பரில் சில எண்களை எழுதியும் பொதுமக்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு என்று கூறி விற்பனை செய்து வந்தார்.

அவரை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து பட்டன் மொபைல் போன் ஒன்று, சாம்சங் மொபைல் ஒன்று, வெள்ளை பேப்பரில் மூன்று எண்கள் எழுதப்பட்ட வெள்ளை துண்டு சீட்டுக்கள் 4, ரொக்கம் ஆயிரத்து 900 ரூபாய் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் விசாரணையில் இவர் குள்ளங்காடு பகுதியை சேர்ந்த சுரேஸ், 35, என்பது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இவரிடம் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story