குமாரபாளையத்தில் ரேஷன் அரிசி நூதன பதுக்கல்; 22 மூட்டைகள் பறிமுதல்

குமாரபாளையத்தில் ரேஷன் அரிசி நூதன பதுக்கல்; 22 மூட்டைகள் பறிமுதல்
X

குமாரபாளையம் ராஜராஜன் நகர் பகுதியில் விற்பதற்காக வைக்கப்பட்ட 22 ரேசன் அரிசி மூட்டைகள்.

குமாரபாளையத்தில் நூதன முறையில் பதுக்கி வைக்கப்பட்ட 22 ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், குமாரபாளையம் ராஜராஜன் நகர் பகுதியில் ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேரில் ஆய்வு செய்ததில் ஒரு சில வீடுகளின் முன்பு சுமார் 50 கிலோ கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அங்கிருந்த 22 மூட்டைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசிகள் தனி வீட்டின் அறையில்தான் இதுவரை பதுக்கி வைத்தது நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது யாரும் சந்தேகப்படாத வகையில் வீடுகளின் முன்பே மூட்டைகளை வைத்து, அதன் பின் டெம்போவில் ஏற்றி சென்று விற்கப்படுகிறது.

இங்கு பறிமுதல் செய்யப்பட்ட 22 மூட்டைகளையும் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. நூதன முறையில் ரேசன் அரிசி விற்கப்படுவதை கடுமையான நடவடிக்கை மூலம் தடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!