குமாரபாளையம் கும்பாபிஷேக விழாவில் இன்னிசை, நடன நிகழ்ச்சி

குமாரபாளையம் கும்பாபிஷேக விழாவில் இன்னிசை, நடன நிகழ்ச்சி
X

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா செப் 8ல் நடைபெற்றது. இதையடுத்து தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார். நடன நிகழ்ச்சியில் அம்மன் மற்றும் திரைப்பட நடிகர்கள் போலும் வேடமிட்டு நடனமாடினார்கள்.

இரு ஆண்டுகளாக எந்தவொரு மேடை நிகழ்ச்சியும் நடைபெறாத நிலையில் இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்களை பெருமளவில் பங்கேற்றனர். நாட்டாண்மைக்காரர் முருகேசன், கவுன்சிலர் வள்ளியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story