குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி
லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற குமாரபாளையம் தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், ஓட்டு போட அத்தாட்சி சீட்டு வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 279 ஓட்டுப்பதிவு மையங்களில் பணியாற்றும் 976 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை நடந்தது. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன், தாசில்தார் சண்முகவேலு தலைமையில் தேர்தல் நடைமுறைகள், செயல்விளக்கங்கள் காணொலி காட்சி வாயிலான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி ஏப். 7, 18 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறவுள்ளது. உதவி தாசில்தார் செல்வராஜ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ. முருகன், செந்தில், ரஞ்சித்கும்ர், தியாகராஜன், ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu