கழிவுகள் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து வேண்டி நகராட்சி தலைவர் தகவல்
கழிவுகள் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து வேண்டி நகரராட்சி தலைவர் தகவல்
கழிவுகள் மேலாண்மை குறித்து குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அறிக்கை விடுத்துள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கழிவு மேலாண்மை விதிகள் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறை படியும், அனைத்து கழிவுநீர் வாகனங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து உரிமம் பெறப்பட்டுள்ளது. மேலும் அதனை செயல்படுத்தும் வகையில் 14420 கட்டணமில்லா தொலைபேசி எண், கழிவுநீர் மேலாண்மை குழு மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு 100 சதவிகிதம் திறந்த வெளியில் மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் இல்லாத நகராட்சியாக மற்றும் பாதுகாப்பான முறையில் கசடு
கழிவுகள் மேலாண்மை செயல்பட்டு வருவது தொடர்பான சுயபிரகடனம் செய்ய மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் இப்பொருள் தொடர்பாக ஏதேனும்ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் ஆணையாளர், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவருக்கு எழுத்து வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu