குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் அனுஷ்டிப்பு

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி, வல்லபாய் படேல் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இருவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் இருவரது படங்களுக்கும் தீபாராதனை காட்டி வணங்கியதுடன், இந்திராகாந்தி நினைவு நாளை அனுஷ்டிக்கும் விதமாக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், நகர பொருளர் சிவராஜ், நகர கமிட்டி துணைத் தலைவர் காளியப்பன், நகர பொதுச் செயலர் சுப்ரமணியம், மாவட்ட செயலர் கோகுல்நாத், நகர செயலர்கள் காந்தி சண்முகம், ஜனார்த்தனன் மற்றும் 33 வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu