விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த கிரிக்கெட் வீரர் நடராஜன்!

விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த   கிரிக்கெட் வீரர் நடராஜன்!
X

படவிளக்கம் :

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை, கோட்டைமேடு பகுதியில் தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை, கோட்டைமேடு பகுதியில் தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு கிரிக்கெட் விளையாடி மைதானத்தை திறந்து வைத்தார்.

விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த கிரிக்கெட் வீரர் நடராஜன்

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை, கோட்டைமேடு பகுதியில் தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு கிரிக்கெட் விளையாடி மைதானத்தை திறந்து வைத்தார்.

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை கோட்டைமேடு பகுதியில் தனியார் சார்பில் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சேலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்து பூரண கும்ப மரியாதை செய்தனர். பின்னர் ரிப்பன் வெட்டி விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் விழா மேடையில் பேசியதாவது:

தான் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவன். சின்னப்பம்பட்டி என்ற தனது ஊர் பெயர் யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட பின்தங்கிய கிராமத்தில் இருந்து என்னால் உயர முடிந்தது என்றால், அனைவராலும் முடியும். நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறீர்களோ, விளையாட்டாக இருக்கட்டும் வேறு எந்த துறையாக இருக்கட்டும், அதற்கு உண்மையாக உழைக்க வேண்டும் நேர்மையாக நடக்க வேண்டும், கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். கிரிக்கெட் என்பது விலை உயர்ந்த விளையாட்டு என பலரும் கூறுவது உண்டு. ஆனால் நம்மிடம் என்ன இதுக்கிறதோ அதை வைத்து விளையாட வேண்டும். என்னுடைய 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினேன். 20 வயதுக்கு மேல் தான் கார் பால் கிரிக்கெட் விளையாடினேன். தற்போது சிறுவர்கள், சிறுமியர்கள் என பலரும் கிரிக்கெட் தங்களது சிறு வயதிலேயே விளையாடி வருகின்றனர். மேலும் எனக்கு மைக்கில் பேசத் தெரியாது ஆனால் பந்து கொடுத்தால் வீச தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் சொந்தமாக கிரிக்கெட் தெரியாதவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு சொல்லித் தருவதாகவும், இதன் மூலம் பலரும் தமிழ்நாடு லீக் மற்றும் பல்வேறு லீக் போட்டிகளி ல் பங்கு பெற்றுள்ளனர் எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் வீரர் டோனியுடன் பேசும்பொழுது அவர் எப்பொழுதுமே உடற்பகுதியை குறித்து மட்டுமே கேட்பார் எனவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்குவார் என கூறினார்.

இதில் ஜெய் ஆட்டோ பைனான்ஸ் விஜயராம், அருண் மன்னாதன், பச்சியண்ணன், வழக்கறிஞர் ஐயப்பன், ஆதித்யன், சக்தி, அர்ஜுன், யுகேந்திரன், ஹர்ஷன், தேஜஸ்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!