குமாரபாளையத்தில் போக்குவரத்து மாற்றத்தால் நெரிசல் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையத்தில் போக்குவரத்து மாற்றத்தால் நெரிசல் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
X

பவானி செல்லியண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்ததால் குமாரபாளையம் சேலம் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

குமாரபாளையத்தில் போக்குவரத்து மாற்றத்தால் சேலம் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

குமாரபாளையத்தில் போக்குவரத்து மாற்றத்தால் சேலம் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பவானி செல்லியண்டியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. மேட்டூர் சாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த அலகு குத்தியவாறும், உடல் முழுதும் சேற்றை பூசிக்கொண்டும் மேள தாளத்துடன் ஊர்வலமாக செல்வது வழக்கம். இதனால் ஈரோடு, மேட்டூர், செல்லும் வாகனங்கள் குமாரபாளையம் காவேரி பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் இடைப்பாடி சாலை, குமாரபாளையம் சேலம் சாலையில் வழக்கத்தை விட அதிகமாக வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சாலையோர தள்ளுவண்டி மற்றும் ஜவுளி வியாபாரிகள், நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இது போன்ற அத்தியாவசியமான சமயங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படாதிருக்க, இடைப்பாடி சாலை, சேலம் சாலைகளில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
ai and future of jobs