குமாரபாளையத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் கடைகள் அதிகரிப்பு
குமாரபாளையத்தில் ஆயுத பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் அதிகரித்தன.
குமாரபாளையத்தில் ஆயுத பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் அதிகரித்தன.
இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பூஜை நடைபெறவிருப்பதால் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஆயுத பூஜைக்கு தேவையான வாழைப்பழங்கள், தேங்காய், பழ வகைகள், வாழைக்கன்றுகள், மாவிலை, பூமாலைகள் மற்றும் பொரி உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடைகள் அதிகரித்து காணப்பட்டன.
பொதுமக்களும் ஆர்வத்துடன் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள், வியாபார நிறுவனங்களில் தொழிலாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஸ்டேஷனரி கடைகளில் வண்ண காகிதங்களால் ஆன தோரணங்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.
பூஜையில் பலர் பொரி, கடலையும், பலர் சுண்டலும் கொடுப்பது வழக்கம். இதனால் பல மளிகை கடைகளில் சுண்டல் வாங்கவும் பொதுமக்கள் அரவம் காட்டி வந்தனர். அரசு பள்ளி, கல்லூரிகளில் விடுமுறைக்கு முன்பே பூஜை போட்டனர். தனியார் பள்ளி, கல்லூரிகளில் இன்று பூஜை போடப்படுகிறது.
பள்ளி, கல்லூரி வாகனங்களும் தூய்மை படுத்தப்பட்டு, விபூதி பட்டை, சந்தனம், குங்குமம் இடப்பட்டன. தனியார் மில் வேன்களுக்கும், பஸ்களுக்கும் இதே போல் விபூதி பட்டை போடப்பட்டன. ஆயுத பூஜை, விஜய தசமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu