குமாரபாளையத்தில் வெயிலின் தாக்கத்தால் குளிர்பான கடைகள் அதிகரிப்பு
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிர்பான கடைகள், கரும்பு சாறு கடைகள் அதிகரித்து வருகிறது.
ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகம் இருக்கும் என்பது வழக்கம். ஜனவரி மாதத்தில் கூட பல நாட்கள் மழை பெய்தது. கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் தான் விவசாயத்திற்காக மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் நீர் திறந்து விடப்படும். ஆனால் மேட்டுர் அணையில் நீர் நிரம்பி இருந்ததால் இந்த ஆண்டு ஜூலை மாதமே திறக்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் கூட பல நாட்கள் மழை பெய்தது. ஜனவரியில் நிறுத்தப்படும் வாய்க்கால் நீர் சில நாட்கள் முன்புதான் நிறுத்தப்பட்டது.
தற்போது குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் குளிர்பான கடைகள், இளநீர் கடைகளை நாடி வருகிறார்கள். இதனால் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிர்பான கடைகள், இளநீர், கரும்பு சாறு, தர்பூசணி கடைகள் அதிகரித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu