நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அறை திறப்பு விழா

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அறை  திறப்பு விழா
X

குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அறையை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி, அரசு வழக்கறிஞர் அனிதா பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அறை திறப்பு விழா நடந்தது.

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அறை திறப்பு விழா

குமாரபாளையம் நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அறை திறப்பு விழா நடந்தது.

குமாரபாளையம் நீதிமன்றம் 2020, ஜூலை 18ல் துவக்கப்பட்டது. இங்கு வழக்கு சம்பந்தமான பணிகளை செய்ய வழக்கறிஞர்கள் பெருமளவில் வருகிறார்கள். ஆனால் இவர்கள் தங்கள் பணிகளை துவக்க ஆயத்த பணிகள் செய்ய, இவர்களுக்கென்று தனி அறை இல்லாமல் இருந்தது. வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர் அறை கட்ட, இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுகொண்டனர்.

மூன்று ஆண்டு கால போராட்டத்திற்கு பின், 30க்கு 20 சதுர அடி எனும் அளவில், வழக்கறிஞர் அறைக்கு, நீதிமன்ற வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 2.75 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா சங்கத்தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது.

குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி, அரசு வழக்கறிஞர் அனிதா பங்கேற்று, ரிப்பன் வெட்டி, வழக்கறிஞர்கள் அறையினை திறந்து வைத்ததுடன் குத்துவிளக்கேற்றி வைத்து வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சங்க செயலர் நடராஜன், பொருளர் நாகப்பன், துணை தலைவர் நந்தகுமார், துணை செயலர் ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story