குமாரபாளையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

குமாரபாளையத்தில்   சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. மலர்விழி தேசிய கொடி ஏற்றினார். 

குமாரபாளையத்தில் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

75வது சுதந்திரதினவிழா குமாரபாளையத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள் சார்பில் கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் விஜய்கண்ணன், அரசு கலை கல்லூரியில் முதல்வர் ரேணுகா, அரசு கல்வியியல் கல்லூரியில் முதல்வர் ஜான் பீட்டர், அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவர் இளங்கோ, போலீஸ் ஸ்டேஷனனில் எஸ்.ஐ. மலர்விழி, ஜி..ஹெச்.இல் தலைமை டாக்டர் பாரதி, காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜானகிராமன் தேசிய கொடி ஏற்றினர்.

சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், மேற்கு காலனி நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி, நாராயண நகர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியை பாரதி, வாசுகி நகர் ஒன்றிய பள்ளியில் நாகரத்தினம், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. அலுவலகத்தில் ஆர்.ஐ. விஜய். வி.ஏ.ஓ. அலுவலகங்களில் வி.ஏ.ஓ.க்கள் முருகன், தியாகராஜன், அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சிவகாமி, சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் வாரிசுகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் சேர்மன் விஜய்கண்ணன் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!